Tuesday, August 08, 2006

என் அறிமுகம்...

'என் அறிமுகம்' அப்படினு தலைப்பு கொடுத்ததால என்னை பத்தி ஏதோ பெருசா சொல்லப்போரென்னு நீங்க நினைக்கலாம். அதல்லாம் ஒன்னும் இல்லை. என்னை பத்தி சொல்லனும்னா அதுக்கு இந்த ஒரு போஸ்டிங் போதாது. (அவ்வளவு பெரிய இம்சை வரலாறு உண்டு எனக்கு...). ப்ளாக்ஸ் என்னும் இந்த வலைதளத்திற்க்கு நான் புதியவன் என்கிறதால 'என் அறிமுகம்' நு தலைப்பு கொடுத்தேன். வேற ஒன்னும் பெருசால்லாம் இல்ல.

இணையத்துல ஆறு வருசமா உட்கார்ந்து மாவாட்டுனவன்னாலும் இந்த ப்ளாக்ஸ் என்னும் வலைதளத்தைப் பற்றி நான் தெரின்ச்சு கிட்டது சுமார் இரண்டு மாசத்துக்கு முன்னால தான். ஜுனியர் விகடன் வார இதழ்ல 'ப்ளாக்ஸ் நு ஒரு கட்டுரை வெளியுட்டிருந்தாங்க. மேலும் ப்ளாக்ஸ் என்றால் என்ன அதன் பயன்கள் என்னன்ன அப்படின்னும் விளக்கி இருந்தாங்க. அத படிச்ச பிறகுதான் வலைதளம்னு ஒன்னு இருப்பதையே தெரின்ச்சுகிட்டேன். அதனால நாமளும் ஒரு வலைதளத்த ஆரம்பிச்சா என்னனு என் கபாலத்துக்குல பல கில்லி விளையான்டதோட விளைவுதான் இந்த 'மதுரைக்காரன்' ங்கிற ஒரு சிறிய வலைதளம்.

நான் காலேஜ் படிக்கிறப்போ...நம்ம பையன் கணிப்பொறி துறையுல பெரிய ஆளா வரனும்னு எங்க அப்பா 'தமிழ் கம்யுட்டர்' மாத இதழ் அடிக்கடி வாங்குவாரு. அப்ப அந்த ஒரு பத்திரிக்கை தான் தமிழ் ல உருப்படியா இருந்த ஒரு கம்யுட்டர் மேகஜின். ஆனா நான் சரியா படிச்சா தானே. எனக்கு பிடிச்ச சில குறுந்தகவல் செய்திகளை மட்டும் படிச்சிட்டு மூடி வச்சிருவேன்...எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் மாதிரி. அப்படி அந்த இதழ படிச்சப்போ ஒரு கட்டுரை படிசேன்.

பொதுவா கணிப்பொறி(அதாங்க கம்யுட்டெரு) பரவலா தமிழ்நாட்டுல பரவ ஆரம்பிச்சபோது தமிழ் கம்ப்யுட்டர் இதழின் ஒரு கட்டுரைஇல் 'இனிமேல் கணிப்பொறி இல்லாம இந்த உலகம் இல்ல. அதனால கணிப்பொறி யை பத்தி தெரிஞ்சு வச்சிருப்பது மட்டும் இல்லாம அதை முலுசா கத்துக்கவும் வேணும்... அப்பதான் கணிப்பொறிங்கிற பஸ்ஸில் ஏறி உட்கார்ந்து விடலைனாலும் அதோட படிகட்டில்லிலாவது தொங்கி கொண்டு போய் விடலாம், இல்லைனா காலம்கிற அந்த பஸ் நம்மை விட்டு விலகி வெகுதூரம் சென்று விடும் நு வெளியுட்டிருந்தாங்க.

நான் கல்லூரியில் படிக்கிற போது எங்கள் கல்லூரிக்கு மாநகர பஸ்ல தான் போகனும். கல்லூரி வழியா போற எல்லா பஸ்ஸும் கூட்ட நெரிசல்ல சிக்கி திணறும். தினமும் நான், என் கல்லூரி நண்பர்கள் அனைவரும் படிக்கட்டில் தொங்கிக்கிட்டு போற பழக்கம் உடையவங்க. சில நாள்ல கூட்ட நெரிசல் அதிகமா இருக்கும். எவ்வளவு நேரம் தான் 'அடுத்த பஸ்ஸை பார்ப்போம்'னு இருக்குறது. கல்லூரிக்கும் நேரமாயிடும். ஆகையால அடுத்து வர பஸ்ஸின் இரண்டு படிக்கட்டுகளுக்கும் நடுவுல இருக்குற மின்கலப் பெட்டியின்(Battery Box)கதவை திறந்து விட்டுருவோம். அதுவும் பஸ்ஸோட ரன்னிங் ல தான் திறப்போம். அதுல நான் அப்புறம் படிக்கட்டில கால் வைக்க இடம் கிடைக்காத சில நண்பர்கள் சிலரும் செர்ந்து மின்கலப் பெட்டியுல கால வச்சி குரங்காட்டம் தொங்கிக்கிட்டு போவோம். டிரைவரும் தலையுல அடிச்சிகிட்டே வண்டிய ஒட்டிகிட்டு போவாரு.

இப்போ இதைலாம் சொல்லி எதுக்குடா அறுக்குறானேனு பாக்குறிங்கலா. இருங்க..இருங்க.. மேட்டேருக்கு வந்துட்டேன். அத போல இந்த 'இணையதளம்' என்ற பஸ்ஸோட சீட்ல உட்கார, தொங்க முடியாட்டாலும் மின்கலப் பெட்டி போன்ற இந்த சிறிய இடத்திலாவது காலை வைத்து தொத்திக் கொண்டு போயுருவோம்னு இந்த சிறிய வலைதளத்தை ஆரம்பிச்சுட்டேன்.

என்னை பத்தியும், நான் கண்ட, கேட்ட, அனுபவிச்ச சில சுவாரசிய நிகழ்வுகளையும் எலுதுவதோடு இல்லாம, இப்போ என்னை சுற்றி அப்பப்போ... எப்பவுமே நடக்கிற சில பல சம்பவங்களையும் சேர்த்து எலுதுவதற்குதான் இந்த வலைதளம்.