புதுசா தமிழ்நாட்டுல ஆட்டோ மீட்டர் கட்டணம் திருத்தப்பட்ட பிறகு முதல் முறையா ஆட்டோவுல திருவல்லிக்கேணியில் இருந்து எக்மோர் வரைக்கும் ஆட்டோவுல போக வேண்டியதா இருந்துச்சு. பழக்க தோஷத்துல எவ்வளவு-நு கேட்டு தொலைச்சிட்டேன். அறுபது ரூபா குடுங்க சார் -நு சொன்னான் டிரைவர். அம்பது ரூபா தரேன்னு அலுவலகம் போக நேரமாயிடுச்சேனு ஏறி உட்கார்ந்து மீட்டர் இல்லையானு கேட்டேன். மீட்டர் போட்டா எவ்வளவு வருதோ அத விட இருபது ரூபாய் கூட தர்றியா - நு கேட்டான். பார்க்கலாம்னு சொல்லி வண்டிய எடுக்க சொன்னேன். அடுத்து நான் பண்ணது...முதல்ல என்னோட ஸ்மார்ட்போன்-ல திருவல்லிக்கேணி டு எக்மோர் எவ்வளவுநு பார்த்தா Google Maps la 4.4 கிலோ மீட்டர் காட்டுச்சு. அதே போல திருத்தப்பட்ட கட்டணம் எவ்வளவுன்னும்Chrome browser-la browse பண்ணி பார்த்தா... முதல் 1.8 கிலோமீட்டர் 25.00 ரூபாயும் அப்புறம் ஒவ்வொரு கிலோமிட்டர்களுக்கு 12.00 ரூபாயும் கட்டணமா இருந்தது . சரி...இறங்கும் போது ரொம்ப பேசினானா அவன்கிட்ட பேசுறத்துக்கு மேட்டர் கிடைச்சாச்சுன்னு இருந்தேன். ஒரு வழியா எக்மோர் போய் சேர்ந்தப்போ மீட்டர்படி நாலு கிலோமிட்டருக்கும் குறைவா தான் இருந்தது. கட்டணம் 41.50 காசு. Google maps படி திருவல்லிக்கேணி கோவில்ல இருந்து Navigation Start ஆச்சு. ஆனா நான் அத விட ஒரு கிலோமிட்டர் தள்ளி தான் ஆட்டோ ஏறினேன். அவன் கேட்டதோ 60.00 ரூபாய், ஆனா மீட்டர்படி 41.00 ரூபாய். மீட்டர் காசுதான் குடுப்பேன்னு சொல்லி கடைசியா போய் தொலைடாநு 45.00 ரூபாயா குடுத்துட்டு அப்பிட் ஆனேன். இத ஏன் சொல்லுறேன்னா இனிமே ஆட்டோவுல போகும்போது மீட்டர் போடச் சொல்லுங்க. இதுக்கு முன்னாடி எப்படி எல்லாம் நம்மல ஏமாத்தி இருக்கானுங்க பாருங்க... திருட்டுப்பசங்க.