அலுவலகத்தில் பொழுதுபோக்காக வலைப்பக்கங்களை புரட்டி கொண்டு இருக்கும் போது இங்கிலாந்து நாட்டின் சில வலைப்பக்கங்களை பார்க்க நேர்ந்தது. அதில் சிலவற்றில் இங்கிலாந்து நகர தெருக்களை காட்டும் மிக நெருங்கிய செயற்கைகோள் படங்கள் இருந்தன. அதுவரையில் அதை பற்றி கேள்வி பட்டு இருந்தேனே ஒழிய படங்களை பார்த்தது இல்லை. ஆச்சர்யப்பட்டு அதை அறியும் ஆவலில் கிலிக் செய்தேன். அதில் இங்கிலாந்து நாட்டின் பல்வேறு பகுதிகள் செயற்கைகோள் படங்களாக இருந்தன. சரி நம்ம ஊரும் வரும்னு தேடி பார்த்தால் ஒன்றும் இல்லை. பிறகு அதை பற்றி அறியும் ஆவலில் கூகிள் மேப்சில் தேடியதில் கிடைத்ததே கிலே உள்ள சென்னை மாநகரத்தின் செயற்கைகோள் படமும், மற்றும் நான் இருக்கும் திருவல்லிக்கேனி மான்சன் பகுதிகளும். உலகத்தின் எந்த மூலையில் உள்ள ஊரையும் துல்லியமாக காட்டும் கூகிள் எர்த் மற்றும் கூகிள் மேப்ஸ் உண்மையில் ஆச்சரியம் மட்டும் அல்ல ஆபத்தானதும் கூட தான்.






ம்ம்ம் இது இப்பல்லாம் சகஜம்
ReplyDelete