குடும்பத்திலும் சரி, அலுவலகத்திலும் சரி, மனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும், ஏற்பட்ட விரிசல்கள் மேலும் பெரிதாகாமல் இருக்க -
1) நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை (Ego) விடுங்கள்.
2) அர்த்தமில்லாமலும், பின் விளைவு அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள் (Loose Talks)
3) எந்த விஷயத்தையும், பிரச்சனையையும் நாசுக்காக கையாளுங்கள் (Diplomacy), விட்டுக் கொடுங்கள் (Compromise).
4) சில நேரங்களில் சில சங்கடங்களைச் சகித்துத்தான் ஆக வேண்டும் என்று உணருங்கள் (Tolerance).
5) நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று வாதாடாதீர்கள் (Adament Argument), குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள். (Narrow Mindedness)
6) உண்மை எது, பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும், அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள் (Carrying Tales)
7) மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள் (Superiority Complex)
8) அளவுக்கதிகமாய், தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள் (Over Expectation)
9) எல்லோரிடத்திலும், எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ, இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.
10) கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பிவிடாதீர்கள்.
11) உங்கள் கருத்துகளில் உடும்புப் பிடியாக இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள் (Flexibility)
12) அற்ப விஷயங்களைப் பெரிதுபடுத்தாதீர்கள்
13) மற்றவர் கருத்துக்களை, செயல்களை, நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாக புரிந்து கொள்ளாதீர்கள். (Mis-understanding)
14) மற்றவர்களுக்கு மரியாதை காட்டவும், இனிய இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள்.(Courtesy)
15) புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச் சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.
16) பேச்சிலும், நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும் தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதை தவிர்த்து அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்.
17) அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் விட்டு பேசுங்கள்.
18) பிரச்சனைகள் ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன் வாருங்கள்.
19) நிலையை உயர்த்து..... நினைப்பை உயர்த்தாதே.
20) விட்டுக் கொடுப்பவன், கெட்டுப் போவதில்லை.
வேதாத்திரி மகரிஷி
இதெல்லாமே இருந்தால் மக்கள் கடவுளாகி விடுவார்கள்!!!
ReplyDeleteஅற்புதமான விசயங்கள். இதை ஒவ்வொருவரும் பின்பற்றும்போது மன அமைதி நிலவும்?! பின்பற்றுபவர் வேண்டுமெனில் அமைதி நிலவுவதாய் எண்ணிக் கொள்ளலாம். செயல்களைப் பொருத்தே சில விசயங்கள் அமைகின்றன. ஞான உபதேசங்கள் எல்லாம் கேட்பதற்கும், ரசிப்பதற்கும் மட்டுமே பயன்படக்கூடியவை. இதை வாழ்வில் நடைமுறைப் படுத்த முயற்சி மிகவும் தேவை, முயற்சி செய்தே வாழ்க்கை முடிந்துவிடும். (இப்படி எழுதிட்டேனு உங்களுக்கு கோபம் எதுவும் வரலையே)
ReplyDelete'உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்' க்கு எதிரா இருக்கே எண் 19 தத்துவம்.
அப்புறம் இன்னொன்னு 'விட்டுக்கொடுப்பவன், கெட்டுப் போவதில்லை' சொல்றப்பவே சண்டை ஆரம்பிச்சிரும், ஏன் நான் விட்டுக்கொடுக்கலையா, நீ விட்டுக்கொடுத்தா என்ன அப்படின்னு எண் 1 தொடங்கிரும்.
எனவே 'இயல்பாக இருக்கப் பழகிக் கொள்ளுங்கள்'னும் 'எக்காரணம் கொண்டும் பிறர் மனதை புண்படுத்தும்படியோ, உங்கள் மனம் புண்படும்படியோ நடந்து கொள்ளாதீர்கள்னு சொன்னா நல்லா இருக்கும்.
மகரிஷி சொன்ன விசயமெல்லாம் மனிதரின் பலவீனங்களே. அதைப் பலப்படுத்த என்ன செய்யனும்னா இதையெல்லாம் விட்டுரக்கூடாது, அதையே லாவகமாக கையாளனும், இல்லையின்னா உணர்ச்சியற்றவர்களாக மாறிருவோம்.
நல்ல விசயங்களை நினைவில் வைப்போம், ஆனால் செய்றதை செஞ்சிக்கிட்டே இருப்போம் எனும் கொள்கைதான் பிடித்தமானதாக பலருக்கும் இருக்கும்.
நல்லதொரு பதிவு. மிக்க நன்றி. நல்ல எண்ணங்களைப் பரவச் செய்தால் நன்மையே விளையும் என ஒப்புக்கொள்வதோடு நான் எழுதிய நிதர்சன நிலை மாற வேண்டும் எனவும் வேண்டுகிறேன்.
அருமையான கருத்துக்கள்
ReplyDeleteவாழ்க வளமுடன்
வெ.இராதாகிருஷ்ணன் sir உங்கள் கருத்தில் எனக்கு எந்தக் கோபமும் இல்லை. வாழ்வில் இப்பொழுது நடைமுறையில் இருப்பதைத் தானே சொல்லி இருக்கிங்க
ReplyDelete(ஞான உபதேசங்கள் எல்லாம் கேட்பதற்கும், ரசிப்பதற்கும் மட்டுமே பயன்படக்கூடியவை. இதை வாழ்வில் நடைமுறைப் படுத்த முயற்சி மிகவும் தேவை.)
- No pain, No Gain நு ஒரு வாக்கியம் உண்டு. உடற்பயிற்சி செஞ்சா உடம்பு நல்லாதான் இருக்கும். ஆனா அந்த உடற்பயிற்சி செய்யிறதுக்கே பல பேருக்கு வலிக்கும்.
(சோம்பேறித்தனத்த தான் சொல்றேன்). அது போல தான் மனித உறவுகள் நல்லா இருக்கனும்னா இது பொன்ற சில விசயங்களையும் முயற்சி செஞ்சு பயிற்சி பண்ணனும். செஞ்சா Human Relations நல்லா இருக்கும். இல்லைனா நீயா ! நானா ! தான்.
('உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்' க்கு எதிரா இருக்கே எண் 19 தத்துவம்.)
-'நினப்புத் தான் பொழப்ப கெடுக்குது' நு சொல்லுவாங்களே. அந்த அர்த்தத்துல சொல்லி இருக்கலாம் இல்லையா.
பகிர்ந்தமைக்கு நன்றிகள்!!
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஉங்கள் வலைத்தளம் மிக அருமை...
ரசிக்கும் படியாக இருந்தது.. வாழ்த்துக்கள்...
http://ivalbharathi.blogspot.com
http://ivaldevathai.blogspot.com
என் வலைதள முகவரி மேற்கண்டது..
பார்த்துவிட்டு சொல்லவும்..
நன்றி..
நட்புடன்,
இவள் தேவதை பாரதி
மிகவும் அருமை
ReplyDeleteஒவ்வொன்றும் ஒரு புதுமை . மிகவும் அழகாகவும் அழுத்தமாகவும் சொல்லியிருக்கீங்க நண்பரே . பகிர்வுக்கு வாழ்த்துக்கள் !
ReplyDelete